திருப்புவனத்தில் தாய்-மகள் தற்கொலை முயற்சி
திருப்புவனத்தில் தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றனா்.
சிவகங்கை
திருப்புவனம்
திருப்புவனத்தில் நகைக்கடை உரிமையாளரும், அவரது மனைவியும் பிரிந்து வசித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சந்தைதிடல் அருகே உள்ள நகை கடை முன்பு அவரது மனைவியும், அவரது மகள் இருவரும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவர் மீதும் தண்ணீர் ஊற்றி உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாய், மகள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story