மோட்டார் சைக்கிள்கள் மோதல்:3 பேர் படுகாயம்
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தட்டார் வடக்கு தெருவை சேர்ந்த நகைத் தொழிலாளி ம. சுப்பிரமணி (வயது 59). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் செட்டிகுளம் பகுதியில் இருந்து சாத்தான்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அரசர்குளத்தை சேர்ந்த பொன்ராஜ் மகன் மதன், அவரது உறவினர் செல்லதுரை மகன் மகேஷ் ( 33) ஆகியோர் மற்றொரு மோட்டார் ைசக்கிளில் சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அமுதுண்ணாக்குடி விலக்கு அருகே எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.