சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷம்

சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷம்
Published on

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியநாச்சியம்மன் உடனமர் சோழீஸ்வரர் கோவில், செங்கோடம்பாளையம், சோமையநல்லூர் மங்கள கருணாம்பிகா உடனமர் கைலாயநாதர் கோவில், வள்ளியரச்சல் மாந்தீஸ்வரர் கோவில் மற்றும் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில், மருதுறை பச்சை மரகதவள்ளி உடனமர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் ஐப்பசி மாத மகா சனிப்பிரதோஷ பூஜை நேற்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி கோவில்களில் உள்ள நந்தி எம்பெருமான் மற்றும் சிவன்-பார்வதிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை சிவன் கோவில் பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com