ராமநாதபுரத்தில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

மோடியின் ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ராமநாதபுரத்தில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19-ந்தேதி முடிவடைந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். 10 ஆண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை." இவ்வாறு அவர் கூறினார்.  

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில், ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com