தமிழில் பெயர் மாற்ற வேண்டும்


தமிழில் பெயர் மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:30 AM IST (Updated: 22 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்பதை தமிழில் பெயர் மாற்ற வேண்டும் என்று தேனி தமிழ் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

தேனி வையைத் தமிழ்ச் சங்கம் சார்பில், அதன் நிறுவனர் இளங்குமரன் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், "தமிழகத்தில் தமிழ் வளர்க்க தமிழ் வளர்ச்சித்துறை என ஒன்றை நிறுவி, அதன் மூலம் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர் தலைப்பு எழுத்து தமிழில் தான் இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு, நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து புதிய திட்டத்துக்கு பெயர் வைத்துள்ளது. 'நம்ம பள்ளி' 'நம்ம பள்ளி அறத்தளம்' என்று நற்றமிழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுகிறோம்" என்று கூறப்பட்டிருந்தது.


Next Story