நாமக்கல்லில்வக்கீல்கள் உண்ணாவிரதம்
நாமக்கல்
ஜாக் அமைப்பின் தலைவர் மீது தமிழக பார்கவுன்சில் மேற்கொண்டு உள்ள ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வக்கீல்களின் சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நாமக்கல் மட்டும் இன்றி ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி என மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story