களக்காடு அருகே நாராயண சுவாமி கோவில் பரிவேட்டை விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...!


களக்காடு அருகே நாராயண சுவாமி கோவில் பரிவேட்டை விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...!
x

களக்காடு அருகே நாராயண சுவாமி கோவில் பரிவேட்டை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் 93-வது ஆனி திருவிழா கடந்த 24-ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான இன்று பரிவேட்டை விழா நடந்தது. இதையொட்டி மாலையில் அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.

அதனைதொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி பரிவேட்டையாடினார்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 4-ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story