தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குறைதீர்வு முகாம்


தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குறைதீர்வு முகாம்
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:45 PM GMT)

கல்வராயன்மலையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குறைதீர்வு முகாம் இன்று நடக்கிறது.

கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குறைதீர்வு முகாம் இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அமைப்பாகும். குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த புகார்கள் மீது விசாரணை மேற்கொள்வது ஆணையத்தின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும். கல்வராயன்மலையில் இன்று நடைபெறும் சிறப்பு குறைதீர்வு முகாமில் ஆணையத்தின் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் குழந்தைகள் சம்பந்தமான பிரச்சினைகள், புகார்கள் மற்றும் கோரிக்கைகள் போன்றவை குறித்த மனுக்களை நேரடியாக பெற உள்ளனர். மேலும் காணாமல் போன குழந்தைகள், குழந்தை கடத்தல், நிதி ஆதரவு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், ஆதரவற்ற குழந்தைகள், இல்லம் தேவைப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளர், கொத்தடிமை குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், சாலை வாழ் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள், குழந்தைகள் போதை பொருள் பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நேரடியாக புகார் மனு அளிக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story