ரெயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாய் கிடைக்கும்


ரெயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாய் கிடைக்கும்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் ரெயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என பொதுமேலாளரிடம் கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் ரெயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என பொதுமேலாளரிடம் கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

ரெயில் நிறுத்தம்

ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி, தெற்கு ெரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.சிங்கை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- சிலம்பு விரைவு ரெயில் திருச்சுழி அல்லது நரிக்குடி ெரயில் நிலையத்திலும், ராமேசுவரம்-திருச்சி பயணிகள் ரெயில் சூடையூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் ெரயில் நிலையங்களிலும், கன்னியாகுமரி-ராமேசுவரம் விரைவு ரெயில் மண்டபம், பரமக்குடி ெரயில் நிலையங்களிலும், ராமேசுவரம் விரைவு ரெயில் மண்டபம் ெரயில் நிலையத்திலும் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும்.

அதேபோல் ராமேசுவரம்-சென்னை சேது விரைவு ரெயில் மண்டபம் ெரயில் நிலையத்திலும், ராமேசுவரம்-அஜ்மீர் ரெயில் ராமநாதபுரம், பரமக்குடியிலும், ராமேசுவரம்-அயோத்தியா ரெயில் ராமநாதபுரம், பரமக்குடியிலும், ராமேசுவரம்-பனாரஸ் ரெயில் ராமநாதபுரத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் ரெயில்கள்

சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் ெரயில் பெட்டிகள் பழையதாக இருப்பதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, புதிய பெட்டிகளாக மாற்ற வேண்டும். ராமநாதபுரம், பரமக்குடி ெரயில் நிலையங்களில் ெரயில் பெட்டிகளின் அறிவிப்பு பலகை இல்லாமல் இருப்பதால் பயணிகள் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே அறிவிப்பு பலகைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சென்னையிலிருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு விரைவு ரெயில் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு ரெயிலை அறந்தாங்கி வரை நீட்டிக்க வேண்டும். அல்லது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வரை இணைப்பு ெரயில் இயக்க வேண்டும்.

அறந்தாங்கி வழியாக திருவாரூர் மற்றும் காரைக்குடி ெரயில் நிலையங்களை இணைக்கும் வண்ணம் கூடுதலாக ெரயில்களை இயக்க வேண்டும். அறந்தாங்கி பகுதியில் ெரயில்வே சரக்கு யார்டு அமைக்க வேண்டும்.

இருமார்க்கமும்

ராமேசுவரம்-மதுரை பயணிகள் ெரயிலை 3 முறை இயக்க வேண்டும். ராமேசுவரம்-கன்னியாகுமரி (22621/22622) இரு மார்க்கமும் ெரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் மீட்டர்கேஜ் முறையில் இயக்கப்பட்டு வந்த ெரயில்களை பிராட் கேஜ் முறையில் மாற்றப்படும்போது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் இயக்க வேண்டும்.

ராமேசுவரம்-கோவை இரு மார்க்கமும், ராமேசுவரம்-பாலக்காடு பயணிகள் ரெயிலை இரு மார்க்கமும், ராமேசுவரம்-திருச்சி இரவு நேர பயணிகள் ரெயிலை இரு மார்க்கமும் இயக்க வேண்டும். சென்னை-ராமேசுவரம், ராமேசுவரம்-திருப்பதி அந்தியோதயா விரைவு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம்-மதுரை, புனலூர்-பாலக்காடு ஆகிய விரைவு ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

மதுரை வழியாக

ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரெயிலை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும். வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வரும் ராமேசுவரம்-ஓகா விரைவு ரெயிலை வாரம் 3 முறை இயக்க வேண்டும். வட மாநிலங்களிலிருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் ெரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும். பொதுமக்களும் பயனடைய முடியும்.

காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை தொண்டி, ராமநாதபுரம், சாயல்குடி மற்றும் தூத்துக்குடி வழியாக புதிய பிஜி லைன் அமைக்க பரிசீலிக்க வேண்டும். ராமநாதபுரம் ெரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய கூடுதல் மேம்பாலம் அமைக்க வேண்டும். ராமநாதபுரம், பரமக்குடி ெரயில் நிலையத்தில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்கும் வண்ணம் டிஜிட்டல் கோச் இன்டிகேட்டர் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story