எட்டயபுரம் அருகே கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் சிக்கினர்
எட்டயபுரம் அருகே கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் சிக்கினர்
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது, சப்- இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் நேற்று கோவில்பட்டி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமாரகிரி புதூர் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் எட்டயபுரத்தை ேசர்ந்த 17 வயது மற்றும் 15 வயது சிறுவர்கள் என்றும், அந்த பகுதியில் 2 பேரும் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததுதெரிய வந்தது. அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 350கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, தூத்துக்குடி இளம்சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story