கிணத்துக்கடவு அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்- உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கிணத்துக்கடவு அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்- உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்- உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவராயபுரம் சென்றாம் பாளையத்திலிருந்து கோவிந்தாபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக கோவிந்தாபுரம், நெம்பர் 10 முத்து, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதேபோல் வாகனங்கள் செல்லும் போது விபத்துகளும் நடந்து வருகிறது. மேலும், விலை நிலங்களில் விளையும் விளைபொருட்களையும் விவசாயிகள் சாலை வழியாக கொண்டு வந்து சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து இந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே பேராபத்துகள் ஏற்படுவதற்குள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.

Next Story