விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வீர காஞ்சிபுரம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் ஆனி கொடை விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. பூஞ்சிட்டு, சிறியமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பந்தயத்தில் பங்கேற்று வண்டிகளை இழுத்துக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்ற மாடுகளை சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர். வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story