கேட்பாரற்று கிடந்த ஊசி, மருந்து, மாத்திரைகள்
செங்கம் பஸ் நிலையம் அருகே ஊசி, மருந்து, மாத்திரைகள் கேட்பாரற்று கிடந்தது.
செங்கம்
செங்கம் பஸ் நிலையம் அருகே ஊசி, மருந்து, மாத்திரைகள் கேட்பாரற்று கிடந்தது.
மருந்து, மாத்திரைகள்
செங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் செந்தமிழ் நகர் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. ஆடு, மாடு போன்ற கால்நடைகள் விற்பனை செய்யும் வாரச்சந்தை நடைபெறும் இடத்தின் அருகே இந்த அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது.
இங்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் மாத்திரைகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவைகள் கேட்பாரற்று கிடந்தது.
மேலும் பால்வாடி அருகில் அமைந்துள்ள பழைய குடிநீர் தொட்டி கீழே மாத்திரை, மருந்துகள், ஊசிகள் கொட்டி கிடந்தது.
அங்கு இருந்த இரும்புஷெட் ஒன்றில் அட்டைப் பெட்டிகளில் ஏராளமான மாத்திரைகளும், ஊசிகளும் இருந்தது. அரசு வழங்குவது விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் மருந்து அட்டைகளின் மேல் அச்சிடப்பட்டிருந்தது.
நடவடிக்ைக எடுக்க வேண்டும்
அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மருந்து, மாத்திரை மற்றும் ஊசிகள் கேட்பாரற்று கிடக்கிறது.
இதனை சிறுவர்கள் அல்லது மாத்திரையின் தன்மை தெரியாமல் யாரும் பயன்படுத்தி விபரீதம் ஏற்படும் முன் மருந்து மாத்திரைகளை பொதுவெளியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் போட்டு சென்ற நபர்கள் மீதும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மருந்து மாத்திரைகளில் பெரும்பாலும் காலாவதி ஆகும் தேதி 2024-ம் ஆண்டு வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.