வேப்பமரம் வேரோடு சாய்ந்தது


வேப்பமரம் வேரோடு சாய்ந்தது
x

வேலூர் கோட்டை வளாகத்தில் வேப்பமரம் வேரோடு சாய்ந்தது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது மாலை வரை கொட்டி தீர்த்தது. அதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது.

மழையினால் வேலூர் கோட்டை வளாகத்தில் காவலர் பயிற்சி பள்ளிக்கு செல்லும் வழியில் இடதுபுற மைதானத்தையொட்டி நின்று கொண்டிருந்த பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. இரவுநேரம் என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மரம் விழுந்ததில் மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த தொல்லியல்துறை ஊழியர்கள் அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story