நெல்லை: மினி லாரி , இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் .
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோடாரான்குளம் விலக்கில் மினி லாரி இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் .
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பை போலீசார் விரைந்து சென்று பலியான 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் யார்? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story