புதுமாப்பிள்ளை மாயம்

புதுமாப்பிள்ளை மாயம் ஆனார்.
தோகைமலை அருகே நடக்காபட்டியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 30). இவர் திருச்சியில் உள்ள ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (19). இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி சுகுமார் வேலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





