சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது..!


சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது..!
x

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வந்தது.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி திறந்து வைத்தார். இதையடுத்து புதிய முனையம் விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட ஒருங்கிணைந்த விமான முனையம், மக்கள் பயன்பாட்டுக்கு தற்போது வந்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி பயணிகளை கையாள முடியும். இந்த முனையம் முழுவதும் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு உள்ளன. அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளில் ஜொலிக்கின்றன.

80 சோதனை கவுண்டர்கள், 8 சுய சோதனை கவுண்டர்கள், 6 லக்கேஜ் கவுண்டர்கள் மற்றும் 108 குடியுரிமை அதிகாரிகள் சோதனை கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு எளிதில் செல்ல முடியும் என கூறப்படுகிறது.


Next Story