புதிதாக கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மைய கட்டிடங்கள்


புதிதாக கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மைய கட்டிடங்கள்
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மைய கட்டிடங்கள்; காணொலிகாட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

நாகப்பட்டினம்


நாகை மாவட்டத்தில் நாகை, செம்போடை, திருக்குவளை ஆகிய இடங்களில் தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 4.0 தரத்திலான தொழில்நுட்ப மைய கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த தொழில் மையக் கட்டிடங்களை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து நாகை தொழிற் பயிற்சி நிலையத்தில் நடந்த தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 4 பிரிவுகளில் உள்ள இந்த புதிய தொழில் பிரிவுகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 128 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெயமூர்த்தி, தாசில்தார் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story