சென்னை மேம்பாலங்களில் இரவு நேர போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி
போக்குவரத்து நெரிசலை குறைக்க இரவு நேரத்திலும் மேம்பாலங்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரவு நேரத்திலும் மேம்பாலங்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளைத் தவிர்க்க இரவு நேரங்களில் பாலங்கள் மூடப்பட்டு வந்த நிலையில், இனிமேல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, அலுவலகங்களை விட்டு வீடு திரும்புவோர் அதிக அளவு இரவு நேரங்களில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,.
மேம்பாலங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டாமல் இருக்கவும் போதிய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story