நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பு ஏற்பு
நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பு ஏற்பு
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்த முனியசாமி கடந்த மே மாதத்துடன் பணி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து மாவட்ட தொடக்க கல்வி இடைநிலை கல்வி அலுவலராக இருந்த சரஸ்வதி முதன்மை கல்வி அதிகாரி பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இதற்கு இடையே அவரும் பணி மாற்றம் செய்யப்பட்டதால் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, நீலகிரி மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
இதன் பின்னர் கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக இருந்த கீதா என்பவர் தற்போது நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இந்தநிலையில் அவர், ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story