சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லை


சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லை
x

சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,472 -க்கு விற்பனையாகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.78,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story