திமுக கூட்டணியில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை: வைகோ

திமுக கூட்டணியில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை: வைகோ
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திராவிட இயக்கத்தை ஒழிக்க பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் அது பலனளிக்காது. திமுகவேடு இணைந்துதான் திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும். திமுக கூட்டணியில் சிறு பிரச்சினைகள் கூட வர வாய்ப்பில்லை. மதிமுகவுக்கு வளமான, ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் இருக்கிறது. இங்கிருப்பவர்கள் உறுதியாக இருக்கின்றனர். கட்சி இன்னும் வலுப்பெறும்.

வருகிற 15-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் தேறும் நிதி வழங்க வேண்டும் என தலைமையில் இருந்து கேட்கவில்லை. ஆனால் விளம்பரப் பணிகளையும் நிர்வாகிகளை அழைத்து வரும் பணிகளையும் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைகே கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com