தகுதிச்சான்று, சாலை வரி செலுத்தாத2 லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்


தகுதிச்சான்று, சாலை வரி செலுத்தாத2 லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

கோவில்பட்டியில் தகுதிச்சான்று, சாலை வரி செலுத்தாத 2 லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்செய்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில், ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் மற்றும் ஊழியர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலை வரி செலுத்தாமல் சென்ற ஒரு லாரி, தகுதிச் சான்று இல்லாமல் ஓடிய டிப்பர் மினி லாரி மற்றும் ஒரு வேன் ஆகிய 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களுக்கு அபராதமாக ரூ 72,500-ம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனங்களுக்கான சாலை வரி ரூ.30,450-ம் வசூலிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு சென்ற அதிகாரிகள் முறையான ஆவணங்கள் இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமலும் ஆட்டோக்களை ஓட்டக்கூடாது என்று டிரைவர்களுக்கு அறிவுரை கூறி, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.


Next Story