தரமற்ற பருத்தி விதைகளால் மகசூல் இழப்பு
பாபநாசம் அருகே தரமற்ற பருத்தி விதைகளால் மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனா்.
பாபநாசம்;
பாபநாசம் அருகே தரமற்ற பருத்தி விதைகளால் மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனா்.இது குறித்து கோபுராஜபுரம் மற்றும் நத்தம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
பருத்தி சாகுபடி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் சுமார் 260 எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர். பருத்தி விதைகளை பாபநாசத்தை சுற்றியுள்ள தனியார் கடைகளில் வாங்கி சாகுபடி செய்தோம். தரமற்ற பருத்தி விதைகள் வழங்கியதால் பருத்தியில் வளர்ச்சி அடைந்து கிளைகள் வெடிக்காமல் காய், இதழ்களும் குறைவாகவே காணப்படுகிறது.இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பருத்தியின் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விலை போனது. தற்போது ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.
தரமான விதைகள்
தனியார் கடைகளில் தரமற்ற விதைகளை விற்பனை செய்ததால் மகசூல் குறைவு ஏற்பட்டதோடு பருத்தியின் விலையும் குறைவாகவே உள்ளது. இதனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.எனவே அரசு தரமான பருத்தி விதைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.