வடகிழக்கு பருவமழை எதிரொலி - தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு


வடகிழக்கு பருவமழை எதிரொலி - தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு
x

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு உயா்ந்துள்ளதாக நீர் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் நீர் வளத்துறை மூலம் களஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு உயா்ந்துள்ளதாக நீர் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அளவு சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 2.44 மீட்டரும், விழுப்புரத்தில் 1.35 மீட்டரும், திருவண்ணாமலையில் 1.81 மீ அளவுக்கும் நிலத்தடி நீர் அளவு உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை நீடிக்கும் நிலையில், நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story