கவர்னர் குறித்து கருத்து சொல்ல அனுமதி இல்லை: சபாநாயகர் அப்பாவு


கவர்னர் குறித்து கருத்து சொல்ல அனுமதி இல்லை: சபாநாயகர் அப்பாவு
x

முதல்-அமைச்சர் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.

சென்னை,

தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அரசினர் தனித்தீர்மானத்தை முதல் அமைச்சர் முன்மொழிந்தார். பின்னர் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, திருப்பி அனுப்பப்பட்ட தீர்மானங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தனித்தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துகளை பேச வேண்டும்

பேச முன்வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய சட்டமன்ற மரபு, மாண்பு, இறையான்மையை பாதுகாத்திட வேண்டும். இந்திய குடியரசுத் தலைவர் பற்றியோ, இந்திய நாட்டில் உள்ள நீதிமன்றங்களை பற்றியோ அல்லது மாண்புமிகு கவர்னர் பற்றியோ எந்த விதமான கருத்துகளையும் சொல்ல வேண்டியதில்லை. அதற்கான அனுமதி உங்களுக்கு மறுக்கப்படுகிறது. ஏற்கனவே உங்களுக்கு இது தெரிந்த ஒன்றுதான். ஆகவே நம்முடைய முதல்-அமைச்சர் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துகளை தெரிவிக்கலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.


Next Story