'விமான நிலையங்களை தனியாரிடம் கொடுப்பதில் தவறில்லை' - பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்


விமான நிலையங்களை தனியாரிடம் கொடுப்பதில் தவறில்லை - பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்
x

அரசாங்கம் தொழில் செய்தால் அதில் லாபம் வராது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறினார்.

நெல்லை,

விமான நிலையங்களை தனியாரிடம் கொடுப்பதில் தவறில்லை என பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"நாடு முழுவதும் 130 விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களை தனியாருக்கு கொடுப்பதில் தவறில்லை. மத்திய அரசோ அல்லது மாநில அரசோ, எதுவாக இருந்தாலும், அரசாங்கம் தொழில் செய்யக் கூடாது. அரசாங்கம் தொழில் செய்தால் அதில் லாபம் வராது.

அரசாங்கம் என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்பட முடியும். தனியார் என்றால், அவர்கள் தேவைக்கேற்ப வேலையாட்களை வைத்துக் கொள்வார்கள். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்ய முடியாது."

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.



Next Story