நாவல் பழ சீசன் தொடக்கம்


நாவல் பழ சீசன் தொடக்கம்
x

நத்தம் பகுதியில் சீசன் தொடங்கியதால் நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

திண்டுக்கல்

நத்தம் பகுதியில் மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, சப்போட்டா, சீத்தா, இலந்தை உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. அந்தந்த பருவகாலங்களில் விளைச்சல் பெற்று அறுவடை செய்யப்படுகிறது. இதைபோல் நத்தம் பகுதியில் நாவல்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக பரளி, வத்திபட்டி, முளையூர், மலையூர், காசம்பட்டி, புன்னப்பட்டி, பட்டணம் பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, சேத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாவல்பழம் மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பழம் ஆண்டுக்கு ஒரு முறை தான் மகசூல் தரும். மருத்துவ குணம் நிறைந்தது. இந்த மாதம் நாவல் பழம் சீசன் தொடங்கி, ஆகஸ்டு மாதம் கடைசி வரை நீடிக்கும். நத்தம் பகுதியில் நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் 1 கிலோ ரூ.200-க்கு விற்பனையாகிறது. இங்கு விளையும் நாவல் பழங்கள் திண்டுக்கல், மதுரை, துவரங்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

1 More update

Next Story