கண்ணில் கருப்பு துணி கட்டி நர்சுகள் போராட்டம்


கண்ணில் கருப்பு துணி கட்டி நர்சுகள் போராட்டம்
x

கண்ணில் கருப்பு துணி கட்டி நர்சுகள் போராட்டம் நடத்தினர்

மதுரை


கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட நர்சுகளுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், 10-வது நாளாக நேற்று மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், கொரோனா காலத்தில் பணியில் சேர்க்கப்பட்ட நாங்கள் முறையாக எம்.ஆர்.பி. தேர்வு எழுதி பணியமர்த்தப்பட்டோம். கிட்டத்தட்ட 2 வருடம் 7 மாதங்கள் பணி செய்தோம். திடீரென அரசு எங்களை பணியில் இருந்து விடுவித்தது. மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, பல போராட்டங்களை நடத்தி விட்டோம். திடீரென வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால், வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுகிறோம். எனவே, எங்களுக்கு பணி நிரந்தரத்துடன் பணி வழங்க வேண்டும். வரும் நாட்களில் எங்கள் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றனர்.

1 More update

Next Story