சத்துணவு ஓய்வூதியர்கள்-ஆயுஷ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஓய்வூதியர்கள்-ஆயுஷ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 12:54 AM IST (Updated: 11 July 2023 5:40 PM IST)
t-max-icont-min-icon

சத்துணவு ஓய்வூதியர்கள்-ஆயுஷ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மணிமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வருகிற பட்ஜெட்டிலாவது நிறைவேற்ற வேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 750 குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆயுஷ் பணியாளர்கள் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திவாகர் முன்னிலை வகித்தார். இதில் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வேதராஜ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆயுஷ் பல்நோக்கு பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்கவேண்டும், மாதந்தோறும் 1-ந் தேதி சம்பளம் வழங்கவேண்டும், தினக்கூலி முறையிலிருந்து நிரந்தர பணியாளர் முறைக்கு மாற்றவேண்டும், பெண் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story