தர்மபுரியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


தர்மபுரியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 7:00 PM GMT (Updated: 16 Jun 2023 1:00 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் அலுவலகம்

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அந்தந்த அரசு அலுவலகங்களில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் முதியோரை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தர்மபுரியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story