பேரிடர் மீட்பு கருவிகளை அதிகாரிகள் ஆய்வு
தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் பேரிடர் மீட்பு கருவிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை
மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படை ஆகியவற்றை உள்ளடக்கிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை ராணுவப்படையான சசாஸ்திர சீமா பால் பிரிவில் புதிதாக தேர்வு பெற்ற, பயிற்சி எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளை பார்வையிட்டனர்.
மேலும், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் செயல்பாடுகளையும் பார்வையிட்டனர். அப்போது பேரிடர் மீட்பு படையின் துணை கமாண்டண்ட் பிரவீன் அதிகாரிகளுக்கு மீட்பு பணிகள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.
Related Tags :
Next Story