மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அதிகாரிகள் ஆய்வு
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் பேரூராட்சி 13-வார்டு மேற்கு கடைவீதியில் உள்ள ஒரு ஓட்டலில் சமீபத்தில் புரோட்டா சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ் ராம் மற்றும் பொது சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தரைமட்ட தொட்டிகளை ஆய்வு செய்து அதில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து குளோரினேசன் தெளிக்கவும் அறிவுரை வழங்கினர். அந்த ஆய்வின் போது மாவட்ட பூச்சியில் அலுவலர் சேகர், சேந்தமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.