கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு


கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு
x

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையை சேர்ந்த ரவணைய்யா நாயுடு என்பவரின் மனைவி புள்ளம்மாள் (வயது 70). இவர், நேற்று வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் செல்ல முயன்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவன், அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றா்ா.

இதுகுறித்து மூதாட்டி புள்ளம்மாள் கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வவைவீசி தேடி வருகின்றனர்.


Next Story