தக்கலை அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தக்கலை அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை ெசய்து ெகாண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள செம்பருத்திவிளை பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் சுரேஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெனிஷா (வயது 30).
மார்ட்டின் சுரேஷின் தந்தை மார்க் (71), ஜெனிஷாவுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு மார்க் சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் சந்தேகமடைந்த ஜெனிஷா மாடிக்கு சென்று பார்த்தார்.
அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மார்க் அசைவற்று கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெனிஷா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மார்க்கை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--