சேலம் அருகேரெயிலில் அடிபட்டு முதியவர் பலியார் அவர்? போலீசார் விசாரணை

சேலம் அருகேரெயிலில் அடிபட்டு முதியவர் பலியார் அவர்? போலீசார் விசாரணை
Published on

சூரமங்கலம்

சேலம்-வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயதுடைய முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com