மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்.
பெரம்பலூர்
பாடாலூர்:
வேலைக்கு சென்றார்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 70). கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை 10 மணியளவில் 100 நாள் வேலைக்காக காரையில் இருந்து கொளக்காநத்தம் வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணைOld man killed in motorcycle collision
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வேலாயுதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story