மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நாட்டறம்பள்ளி அருகே பையனப்பள்ளி பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாலையோரம் உள்ள மரத்தில் சுமார் 65 வயதான மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதனை பார்த்து நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வெலக்கல்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com