ஆடி வெள்ளிக்கிழமை, ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு.!


ஆடி வெள்ளிக்கிழமை, ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு.!
x

தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ இன்று மட்டும் ரூ.300 அதிகரித்துள்ளது.

குமரி,

ஆடி மாதம் என்பது கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் அதிகம் நடத்தப்படும் மாதமாக உள்ளது. கோவில் நிகழ்ச்சிகளுக்காக இம்மாதத்தில் பூக்களின் தேவை எப்போது அதிகரித்து காணப்படும்.

அந்த வகையில், இன்று ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.250க்கு விற்ற பிச்சிப்பூ இன்று ரூ.150 விலை அதிகரித்து ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ரூ.200க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ரூ.300 அதிகரித்து ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story