நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் ஆறுமுகமங்கலம் பாசனமடை வாய்க்கால் சீரமைப்பு பணி
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் ஆறுமுகமங்கலம் பாசனமடை வாய்க்கால் சீரமைப்பு பணி தொடங்கியது
ஏரல்:
ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் 3-ம் நம்பர் பாசனமடை வாய்க்கால் செடி, கொடிகள் மண்டி தூர்ந்து போய் இருந்ததால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டு வந்ததால் விவசாய நிலத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். தாமிரபரணி வடகால் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் ஆறுமுகமங்கலம் பாசனத் தலைவர் சுப்பத்துரை தலைமையில் விவசாயிகள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் மற்றும் புதுவாழ்வு சங்க நிறுவனர் மோகன் சி. லாசரஸை சந்தித்து விவசாயத்துக்கு வாய்க்காலை தூர்வாரி தருமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இயேசு விடுவிக்கிறார் ஊழியம் மற்றும் புது வாழ்வு சங்கம் சார்பில் பாசன வாய்க்கால் பொக்லைன் மூலம் தூர்வாரும் பணி தொடக்க விழா நிகழ்ச்சி செல்வநாயகபுரத்தில் நடந்தது. இதில் புது வாழ்வு சங்கம் நிர்வாகிகள் அஸ்வின் மிரடக்லின், கிளமெண்ட் எபனேசர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கொட்டாரக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் துரை, விவசாய பாசன குளம் தலைவர் சுப்பத்துரை, இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் எட்வின் சாம்ராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி சாந்தகுமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜான்பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், செல்வநாயகபுரம் ஊர் பிரமுகர்கள் மாரி செல்வம், ராமகிருஷ்ணன், பொன்சேகர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.