பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் பாறைகள் ; அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

பர்கூர் மலைப்பாதையில்   போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் பாறைகள் ;  அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
x

பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் பாறைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு

அந்தியூர்

பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் பாறைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பாறைகள்

அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்ல முடியும். இந்த மலைப்பாதையானது அந்தியூர் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய மலைப்பாதையாக உள்ளது. இதனால் பர்கூர் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பர்கூர் மலைப்பாதையில் மழை பெய்தது. இதனால் பர்கூர் மலைப்பாதையில் ஆங்காங்கே மண் சாிவு ஏற்பட்டு பாறைகள் ரோட்டோரம் விழுந்து கிடக்கிறது.

அகற்ற வேண்டும்

மலைப்பாதையில் மின் விளக்குகள் இல்லாததால் வாகனங்கள் வரும்போது பாறைகள் ரோட்டோரம் விழுந்து கிடப்பது வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் தங்களுடைய வாகனங்களை இயக்குகின்றனர். எனவே பர்கூர் மலைப்பாதையில் ஏற்பட்டு உள்ள மண் சரிவை அகற்றுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பாறைகளையும் அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story