சதுர்த்தி விழாவை முன்னிட்டுவிநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்


சதுர்த்தி விழாவை முன்னிட்டுவிநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 Aug 2023 6:45 PM GMT (Updated: 18 Aug 2023 6:47 PM GMT)

சதுர்த்தி விழாவை முன்னிட்டு சின்னமனூர் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த (செப்டம்பர்) மாதம் 18-ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். மேலும் இந்து முன்னணி சார்பிலும் விழா கொண்டாடப்படும். இதனால் சின்னமனூர் ஒன்றிய பகுதியில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சிலைகள் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படாத வகையில், மாவு மூலம் தயாரிக்கப்படுகிறது. 3 அடி முதல் 14 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சின்னமனூர் பகுதியில் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் ஏராளமானோர் சிலை கேட்டு முன்பதிவு செய்வதால் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுவதாக தொழிலாளர்கள் கூறினர்.


Related Tags :
Next Story