வட்டன்விளை கோவில் கொைட விழாவை முன்னிட்டு முத்தாரம்மன் வீதியுலா
வட்டன்விளை கோவில் கொைட விழாவை முன்னிட்டு முத்தாரம்மன் வீதியுலா நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
பரமன்குறிச்சியை அடுத்த வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி கொடை விழா கடந்த 5 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் அம்மன், செல்வவிநாயகர், சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி, சப்பர பவனி, கரகாட்டம், பக்தி இன்னிசை, திருவிளக்கு பூஜை, 108 பால்குடம் பவனி, சுமங்கலி பூஜை, மஞ்சள் நீராடி அம்மன் வீதியுலா வருதல், நண்பகல் மற்றும் நள்ளிரவில் நேரங்களில் அலங்கார பூஜையுடன் கும்பம் தெருவீதி உலாவருதல், கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு, சிறப்பு அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு பிரசாதம் வழங்கல், இரவில் திரைப்பட இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story