புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு


புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு
x

புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட விஸ்வநத்தம் பஞ்சாயத்தில் உள்ள முனீஸ்வரன் காலனியில் இருந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி சேதமடைந்து காணப்பட்டது. இதனை அகற்றி விட்டு அங்கு புதிய குடிநீர் தொட்டி கட்டி கொடுக்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் ரீட்டா ஆரோக்கியம் கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் சக்திவேல்நாகராஜ், துணைத்தலைவர் நாகேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு சேதமடைந்த மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க புதிய தொட்டி கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ் கலந்து கொண்டு புதிய குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் சக்தி வேல்நாகராஜ், துணைத்தலைவர் நாகேந்திரன், யூனியன் கவுன்சிலர்கள் ரீட்டா ஆரோக்கியம், கணேசன், வார்டு உறுப்பினர்கள் வசந்தலட்சுமி மாரீஸ்வரன், அருணாதேவி சக்திகணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, தேவஆசீர்வாதம், என்ஜினீயர் ராமமுனீஸ்வரன், ஊராட்சி செயலாளர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story