நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்


நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2023 6:59 AM GMT (Updated: 18 Aug 2023 7:00 AM GMT)
சென்னை

சென்னை,

கோவில் குத்தகை விவசாயிகள் மீது நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்து விளைநிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற்றுவதை கைவிட வேண்டும், அரசு கொள்கை முடிவெடுத்து நீதிமன்ற நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சென்னை பெசன்ட்நகரில் கடந்த 15-ந்தேதி சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தமிழக அரசை நோக்கி கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக போராட்டம் நடந்தது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

போராட்டம் குறித்து பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், "மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை விட பல மடங்கு கொடுமையான சட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த விவசாயிகளின் சுதந்திரமே பறிபோகிற மோசமான சட்டமாக நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனை அனுமதிக்க முடியாது. சட்டம் குறித்து உண்மை நிலையை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்'' என்றார்.


Next Story