செந்தில் பாலாஜியின் 3 மனுக்களில் ஒரு மனு தள்ளுபடி

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் 3 மனுக்களில் ஒரு மனு தள்ளுபடி
Published on

சென்னை,

நீதிமன்றக்காவல் ஏற்கனவே வழங்கப்பட்டதால் மனு செல்லத்தக்கதல்ல என்றும் செந்தில் பாலாஜுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக்காவலை திரும்பப்பெறக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைதான நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்ற காவலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்ற காவலுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க கோருவது, காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு இன்று விசாரிக்கிறது. நீதிபதிகள் நிஷா, பரதசக்கரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com