பெயிண்டர் கொலையா? போலீசார் விசாரணை


பெயிண்டர் கொலையா? போலீசார் விசாரணை
x

சேந்தன்குடியில் பெயிண்டர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

பெயிண்டர்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 50). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவருக்கு விஜயா என்ற மனைவியும், சூர்யா என்ற மகனும், பார்கவி என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை தனது சைக்கிளுக்கு காற்று அடிப்பதற்காக அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குமாரவேல் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் ரத்த காயங்களுடன் குமாரவேல் கிடந்துள்ளார். சைக்கிள் கீழே சாய்ந்து கிடந்தது.

கொலையாளி யார்?

இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குமாரவேலை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினர். குமாரவேல் சைக்கிளில் பக்கத்தில் ஒரு இரும்பு குழாய் கிடந்துள்ளது. மேலும் குமாரவேல் உடலில் ஆங்காங்கே ரத்த காயங்களும் இருந்துள்ளது.

மோப்ப நாய் தீரன் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் அருகில் உள்ள வீடுகள் வழியாக சென்ற நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே போலீசார் குமாரவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் குமாரவேலை யாரும் கொலை செய்து உடலை இங்கே வீசி விட்டு சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story