பஞ்சமி நிலம் மீட்பு கூட்டு இயக்க ஆலோசனைக் கூட்டம்


பஞ்சமி நிலம் மீட்பு கூட்டு இயக்க ஆலோசனைக் கூட்டம்
x

பஞ்சமி நிலம் மீட்பு கூட்டு இயக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூரில் பஞ்சமி நிலம் மீட்பு கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். சமநீதி கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் ஆறுமுகம், மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி மதுரையில் பஞ்சமி நில உரிமை மீட்பு மாநாடு கூட்டு இயக்கம் சார்பாக மாநாடு நடத்துவது, தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், வருவாய்த்துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை உடனடியாக உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை பாதுகாக்கவும், தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களை மீட்க அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story