ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை:2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வழக்கில் 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா.
ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை:2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
Published on

கடலூர் தாழங்குடாவை சேர்ந்தவர் மதியழகன் (வயது 48). இவரது மனைவி சாந்தி. இவர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். கடந்த 27-ந் தேதி மதியழகன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தாழங்குடாவை சேர்ந்த 19 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மாசிலாமணி, பிரகலாதன் ஆகியோர் சிதம்பரம் நீதிமன்றத்திலும், ராஜேந்திரன் (63), ராமலிங்கம் (57) ஆகியோர் பண்ருட்டி நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர்.

இந்நிலையில் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க புதுநகர் போலீசார் கடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) வனஜா, ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com