நாடாளுமன்ற தேர்தல் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com